Nirosh / 2020 டிசெம்பர் 23 , பி.ப. 06:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா - டயகம மேற்கு பிரதேசத்தில் கொட்டும் மழையிலும், சிறியவர்கள், பெரியவர்களென 200இக்கும் அதிகமானோருக்குப் பிசிஆர் பரிசோதனைகள் இன்று (23) மேற்கொள்ளப்பட்டுள்ளதாக லிந்துலை பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
மேற்படி பிரதேசத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அங்குள்ளவர்களுக்குப் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, பரிசோதனை மாதிரிகள் கண்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, லிந்துலை நால்வருக்கும், அக்கரப்பத்தனை பசுமலை பகுதியில் இருவருக்கும், இராணிவத்தை நோனாதோட்டத்தில் ஒருவருக்கும், லிந்துலை மவுஸ்ஸாஎல்ல பகுதியில் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த தொற்றாளர்கள் கொழும்பு பகுதிகளிலிருந்து வருகை தந்துள்ளதாக சுகாதார அதிகாரிகளின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளன.
கடந்த இரு தினங்களில் மாத்திரம் டயகம, அக்கரப்பத்தனை பகுதிகளில் 16 தொற்றாளர்கள் இணங்காணப்பட்டுள்ளமை குறிப்பி்தக்கது.
48 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago