Editorial / 2021 ஏப்ரல் 24 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுகாதார வழிகாட்டல்கள், பாதுகாப்பு முறைமைகளை பின்பற்றாத நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் கடுமைப்படுத்தப்பட்டுள்ளன என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
கொரோனா கொத்தணி மற்றும் இணை கொத்தணியை தடுக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நபர்களுக்கு இடையில் செல்கையில், பொது போக்குவரத்தை பயன்படுத்தும் போது முகக்கவசத்தை கட்டாயம் அணிந்திருத்தல் வேண்டும் எனத் தெரிவித்த அவர், அத்துடன், சமூக இடைவெளியை பேண வேண்டும். இவற்றை மீறுவோருக்கு எதிராக கடுமையாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
“அவ்வாறானவர்கள் கைது செய்யப்பட்டு, சட்டத்தின் முன்னிறுத்தப்படுவர்” என்றும் அவர் தெரிவித்தார்.
29 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago