Editorial / 2025 டிசெம்பர் 21 , மு.ப. 09:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரொசேரியன் லெம்பேட்
மன்னார் மூர்வீதியில் அமைந்திருந்த உணவகம் ஒன்றில் கொத்து தயாரிக்க பயன்படும் மூலப் பொருளான ரொட்டியை தரமற்ற மக்கும் தன்மை கொண்ட பேக்கில் (bag) சுருட்டி கொத்து தயாரிப்பதற்குவைக்கப்பட்டிருந்த நிலையில் சுகாதாரத்துறையினரால் கைப்பற்றப்பட்டுஅழிக்கப்பட்டுள்ளது.
உணவகங்கள் தொடர்பாக மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை க்கு தொடர்ச்சியாககிடைக்கப்பெறும் முறைப்பாடுகளைதொடர்ந்து சனிக்கிழமை (20) அன்று மன்னார்மூர்வீதியில் உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நடவடிக்கையின் போது குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது.
அதே நேரம் குறித்த உணவகம் அனுமதியின்றி இயங்கி வந்ததுடன் உணவகத்தில் பணிபுரியும் நபர்கள் சுகாதார அனுமதி கூட பெறாமை கண்டறியப்பட்டது.
அத்துடன் குறித்த உணவகத்தில் அசுத்தமான முறையில் உணவுகள் தயாரிக்கப்பட்டமை,அசுத்தமான முறையில் உணவுகள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தமை,கழிவு நீர் ஒழுங்காக வெளியேற்றப்படாமை,உணவு தயாரிப்பவர்கள் கையுறை,தலையுறை பயன்படுத்தாமை போன்ற பல்வேறு சுகாதார குறைபாடுகள் அடையாளப்படுத்தப்பட்ட நிலையில் குறித்த உணவகத்துக்கு எதிராக பல்வேறு பிரிவுகளில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.
அதே நேரம் எழுத்தூர் பகுதியில் அமைந்திருந்தஒரு வியாபார நிலையத்தில் காலாவதியான பொருட்கள் காணப்பட்டமை, பொருட்கள் ஒழுங்கான முறையில் சுத்தம் செய்யப்பட்டிருக்காமை,எண்ணெய் வகைகள் ஒழுங்கான முறையில் களஞ்சியப்படுத்தப்படாமை கண்டறியப்பட்ட நிலையில் குறித்த வியாபார நிலையத்திற்குஎதிராகவும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago