2026 மே 09, சனிக்கிழமை

கொரோனா ஆடைகள் நீரோடையில் சிக்கின

R.Maheshwary   / 2020 டிசெம்பர் 08 , பி.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிரிதலே- பக்கமூன பிரதான வீதியின் கபர போக்குவ பிரதேசத்தின் நீரோடை ஒன்றிலிருந்து கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையின் போது அணிவிக்கப்படும் பாதுகாப்பு ஆடைகள் பல மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பிரதேசத்திலுள்ள விசேட தேவையுடைய ஒருவரால் இந்த ஆடைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், இதன்போது  சில கண்ணாடி போத்தல்களும் பையொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.

இந்த நீரோடையின் நீர் கிரிதலே குளம் வரைக்கும் செல்வதுடன், சாதாரண மக்களும் இந்நீரை பயன்படுத்துவதாகவும் தெரவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட ஆடைகள் குறித்த விசேட தேவையுடைய நபராலேயே எரியூட்டப்பட்டுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .