2026 மே 14, வியாழக்கிழமை

’கொரோனா ஒழிப்புக்காக ஒன்றிணைவோம்’

Niroshini   / 2021 மே 25 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆளுங்கட்சியிலுள்ள அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகள் அனைவரும், தற்போதைய  அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து அதிருப்தியடைந்துள்ளனர் என்று தெரிவித்த முன்னாள் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், எதிர்காலத்திலேனும், அரசியல், கட்சி, இனம், மதம் என்ற பேதங்களை மறந்து, நாம் அனைவரும் ஒன்றிணைந்து, கொரோனா தொற்றை ஒழிப்பதற்கான தீர்மானங்களை எடுப்போம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், “எமது நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட கல்வித்துறைசார் புதிய வேலைத்திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டு உள்ளன. 13 வருடக் கல்விக்கு நிதியொதுக்க முடியாத நிலைமைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது” என்றார்.

கடந்த ஒன்றரை வருடங்களாக, மாணவர்களுக்கு முறையான கல்வித் திட்டம் இல்லை. அன்று மாணவர்களுக்கு டெப்களை வழங்க நடவடிக்கை எடுத்தபோது, அதற்கு எதிராக தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததால், அதன்மூலம் மாணவர்களுக்கு கிடைக்கவிருந்த பயன்கள் இன்று இல்லாமல் போயுள்ளன.

“அனைத்து மாணவர்களுக்கும் கல்வி கற்கும் உரிமை இருக்கிறது. இருப்பினும், சகல மாணவர்களாலும்,  கணினி, டெப், ஸ்மார்ட் போன்களைப் பெற்றுக்கொள்ள முடியாது. அவ்வாறான மாணவர்களுக்காக, அரச தொலைகாட்சி சேவைகளைப் பயனடுத்தும் நடவடிக்கையை எடுக்க வேண்டும். ஆனால், இன்று அவ்வாறான எந்தவொரு வேலைத்திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை.

“கொரோனாவை கட்டுப்படுத்தல், பொருளாதாரம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது. இதற்கான வேலைத்திட்டங்கள் அரசாங்கத்திடம் இல்லையென மக்கள் புரிந்துகொண்டுள்ளனர். குறிப்பாக, நாட்டை முடக்கும் விடயத்தில்கூட அரசாங்கத்திடம் உரிய வேலைத்திட்டம் இல்லை என்பதை மக்கள் நன்கு அறிந்துகொண்டுள்ளனர் என்று” அகிலவிராஜ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .