2026 மே 14, வியாழக்கிழமை

’கொரோனா ஒழிப்புக்கு நிதி உதவி செய்யுங்கள்’

Niroshini   / 2021 மே 25 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டுக்குள் பரவியிருக்கின்ற கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த, அரசாங்கத்திடம் போதியளவு நிதியுள்ளதெனத் தெரிவித்த விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ, இருப்பினும் இந்த வேலைத்திட்டத்தைத் தொடர்ந்து வெற்றிகரமான முன்னெடுத்துச் செல்ல, பொதுமக்களும் தனவந்தர்களும், அரச சார்பற்ற நிறுவனங்களும், தங்களாலான உதவிகளைச் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் உள்ள மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய, அmமைச்சர் நேற்று (24) மேற்கொண்ட கண்காணிப்பு விஜயத்தின் போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்துரைத்துள்ள அவர், “கொரோனா கட்டுப்பாட்டுக்குத் தேவையான போதியளவு நிதி, அரசாங்கத்திடம் உள்ளது. நிதிப் பற்றாக்குறை இல்லை. அதேபோல் பொதுமக்களும் தனவந்தர்களும், அரச சார்பற்ற நிறுவனங்களும் நிதியுதவிகளைச் செய்தால், தொடந்து இந்தப் பணிகளை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியுமென்றார்.

“நாட்டில் பயணக் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளதைப் பெரும்பாலான மக்கள் ஏற்றுக்கொண்டு வீடுகளுக்குள் முடங்கியுள்ள நிலையில், மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், அவர்களுக்கு ஏற்பட்டுள்ள தடைகள், எதிர்காலத்தில் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம், என்பது தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது.

“கொரோனா பிரச்சினையானது, எமது நாட்டுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. முழு உலகமும் இந்த இக்கட்டான நிலைக்கு முகம்கொடுத்துள்ளது. எமது அயல் நாடான இந்தியா, முழு உலகுக்கும் கொரோனா தடுப்பூசியை வழங்கியது. ஆனால் இன்று, அந்த நாட்டுக்கே தடுப்பூசி இல்லாமல் தேடிக்கொண்டிருக்கின்றது. அந்தளவுக்கு அங்கு தொற்று பரவியுள்ளது.

“ஆனால் நாம், வெற்றிகரமாக இத்தொற்றுப் பரவலை கட்டுத்தியுள்ளோம். தடுப்பூசி ஏற்றும் விடயத்தில் நாம் முன்னணியில் இருக்கின்றோம். எனவே, இது தனியாக மேலெழும் விடயமல்ல. உலகத்துடன் இணைந்தே இதிலிருந்து மேலெழ வேண்டும்” என, அமைச்சர் நாமல் மேலும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .