2025 மே 12, திங்கட்கிழமை

கொரோனா தொற்றால் ஒருவர் மரணம்

Mayu   / 2024 ஜனவரி 03 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த நோயாளி ஒருவர் உயிரிழந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக  கண்டறியப்பட்டது.

அனுராதபுரம் பதவியா பிரதேசத்தை சேர்ந்த 55 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் சிறுநீரகநோய் காரணமாக வவுனியா பொதுவைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று (02) இரவு உயிரிழந்தார்.

குறித்த நபருக்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று ஏற்பட்டதாககண்டறியப்பட்டது.

வவுனியாவில் ஒருவருடங்களிற்கு பின்னர் மீண்டும் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

க. அகரன் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X