Nirosh / 2021 மே 25 , மு.ப. 07:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுவசெரிய அம்புலன்ஸ்களில் வைத்தியசாலைகளுக்குக் கொண்டுவரப்படும் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் குறைந்தது 30 நிமிடங்களுக்குள் வைத்தியசாலைக்குள் அனுமதிக்கப்பட வேண்டுமெனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன அனைத்து வைத்தியசாலைகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதுத் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்துள்ள அவர், சுவசெரிய அம்புலன்ஸில் வைத்தியசாலைகளுக்குக் கொண்டுவரப்படும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களை வைத்தியசாலைகளில் அனுமதிப்பதில்லை என தங்களுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதென்றார்.
எனவே இவ்வாறு அழைத்து வரும் தொற்றாளர்களை வைத்தியசாலைக்கு கட்டாயம் குறைந்தது 30 நிமிடங்களுக்குள் அனுமதிக்க வேண்டுமெனவும் அறிவுறுத்திய அவர், தொற்றாளர்கள் வைத்தியசாலைகளை அனுமதிக்கப்படுவதை நிராகரிக்க முடியாதெனவும் தெரிவித்தார்.
இவ்வாறு வைத்தியசாலைகளுக்கு வரும் தொற்றாளர்களை ஏற்றுக்கொண்டு தேவைப்படும் பட்சத்தில் அவர்களை மேலதிக சிகிச்சைகளுக்காக கொரோனா வைரஸ் சிகிச்சை மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தினார்.

3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago