Freelancer / 2021 ஒக்டோபர் 25 , பி.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்றுக்குள்ளான, அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், இரண்டு நாட்களாக பாராளுமன்றத்துக்கு சமுகமளித்திருந்ததாகவும் அங்குள்ள சில இடங்களுக்கு விஜயம் செய்துள்ளதாகவும் சி.சி.டி.வி காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது என படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்தார்.
எனினும், அவர் முகக்கவசம் அணிந்து சரியான சுகாதார சட்டங்களை பின்பற்றியதால், பாராளுமன்றத்துக்கு அவர் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாக தெரியவில்லை என்றும் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் இருந்த நேரத்தில் ஒரு சில தமிழ் எம்.பி.க்களுடன் மட்டுமே தொடர்பு வைத்திருந்ததாக பாராளுமன்ற பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவருக்கு, கொரோனா தொற்று இருப்பது கடந்த 24 ஆம் திகதி கண்டறியப்பட்டதுடன், 2 தடுப்பூசிகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
7 hours ago