Niroshini / 2021 மே 28 , மு.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
மரணங்களை கொரோனா தொற்றால் ஏற்படும் மரணங்களா? என்பதை உறுதிப்படுத்துவது தொடர்பில், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால், சகல வைத்தியர்களுக்கும் விசேட சுற்றுநிரூபமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, கொரோனா தொற்றால் உயிரிழக்கும் நபர்களை உறுதிப்படுத்துவதற்காக வெளியிடப்பட்டுள்ள அச்சுற்றுநிரூபத்தில், வைத்தியர்கள் கடைபிடிக்க வேண்டிய பரிந்துரைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
யாராவது ஒருவர் கொரோனா தொற்றுக்குரிய அடையாளத்துடன் உயிரிழந்தார் என்பதை மருத்துவ ரீதியாக உறுதிப்படுத்துவது அவசியம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்டகால நோய்க்கு உள்ளான ஒருவர் உயிரிழந்தால், அவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிசெய்யப்பட்டாலும் அந்த மரணத்தை தனியாக கணக்கிட்டு, அவரது மருத்துவ அறிக்கையை பரிசோதித்தன் பின்னர் உறுதிப்படுத்தவேண்டும்.
அதுவும், கொரோனா தொற்றே அவரது மரணத்துக்கு பிரதான காரணமென உறுதிப்படுத்தப்பட்டால் மாத்திரமே அம்மரணத்தை கொரோனா மரணமாக உறுதிப்படுத்த வேண்டுமென, சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தொற்றின் இறப்பை உறுதிப்படுத்த உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளை கடைபிடிப்பதுடன், அவரது இறப்புச் சான்றிதழில் அது கொரோனா மரணம் என குறிப்பிடுவது அவசியமாகும்.
சிலரது மரணத்தின் பின்னர் முன்னெடுக்கப்படும் பி.சிஆர் பரிசோதனையின் போது, சம்பந்தப்பட்ட நபர் கொரோனா தொற்றுக்குள்ளானவர் என அடையாளப்படுத்தப்பட்டு, அவரது இறப்புக்கு கொரோனாவே பிரதான காரணமாக பிரேத பரிசோதனையின் போது உறுதிப்படுத்துவது தொடர்பில் உரிய பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்ட வேண்டும் என்றும் அந்த சுற்றுநிரூபத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago