2026 மே 02, சனிக்கிழமை

கொரோனா வைத்தியர்களுக்குக் கொரோனா

Nirosh   / 2020 டிசெம்பர் 26 , பி.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலன்னறுவை - வெலிகந்த கொரோனா விசேட சிகிச்சை மத்திய நிலையத்தின் வைத்தியர்கள் இருவருக்கு இன்று (26) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

திருகோணமலையில் பணிபுரிந்து மேற்குறித்த வைத்தியர்கள் இருவரும்,  கொரோனா விசேட சிகிச்சை மத்திய நிலையத்தில் பணியாற்றுவதற்காக நேற்று (25) வெலிகந்தவுக்கு வந்துள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை நேற்று மேற்கொள்ளப்பட்டிருந்தது. பரிசோதனை முடிவுகள் இன்று வெளியாகிருந்த நிலையில் அவர்களுக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றுக்குள்ளான வைத்தியர்களுடன் தொடர்பிலிருந்த 10 பேர் பொலன்னறுவையில் உள்ள தனிமைப்படுத்தும் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .