Editorial / 2020 டிசெம்பர் 27 , பி.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் மற்றும் புதிதாக பிறப்பிக்கப்படும் கிராம சேவகர் பிரிவுகள் மற்றும் பொலிஸ் பிரிவுகள் தொடர்பிலான விவரங்கள் வெளியாகியுள்ளன.
இவை, நாளைக்காலை 5 மணிமுதல் உடன் அமுலுக்கு வரும் என, அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்பிரகாரம்
கொழும்பில் நீக்கப்படும் பிரதேசங்கள்
கொழும்பில் டேம் வீதி, வாழைத்தோட்டம், மருதானை பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நாளைக்காலை 5 மணிமுதல் நீக்கப்படும்.
கொம்பனி வீதியில், வேகந்த, ஹூனுப்பிட்டிய கிராம சேவகர் பிரிவுகள், நாளைக்காலை 5 மணிமுதல் நீக்கப்படும்
வௌ்ளவத்தையில் மயூரா பிளேஸ், வெல்லம்பிட்டியிவில் லக்சத செவன வீடமைப்புத் திட்டம் ஆகியனவும் நீக்கப்படும்.
பொரளையில் ஹல்கஹவத்த மற்றும் காளிபுள்ளே வத்தை, ஆகியனவும் நீக்கக்கப்படும்
புதிதாக அமுலாகும் பிரதேசங்கள்
வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவில் அளுத்கடை மேற்கு, கிழக்கு ஆகிய கிராம சேகவர் பிரிவுகள், நாளைக்காலை 5 மணிமுதல் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் பிறபிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
3 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago