Editorial / 2019 ஜூலை 10 , பி.ப. 02:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு மாநகர சபையால், 200 மில்லியன் ரூபாய் செலவில், 2016ஆம் ஆண்டு, பெரடைஸ் டோபி வத்த பகுதியில் குறைந்த வருமானம் பெறுபர்களுக்காக அமைக்கப்பட்ட 64 வீடுகளில், 22 வீடுகள் மாநகர சபை உறுப்பினர்களின் உறவினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக முறைபாடு கிடைத்துள்ளதாக, கொழும்பு- மாநகர சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் 42 வீடுகள் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய 22 பேரின் பெயர்பட்டியல் நகர மேயரால், அறக்கட்டளை ஆணையாளருக்கு அனுப்பப்பட்டு, பட்டியலில் உள்ளவர்கள் குறைந்த ஆதாயம் பெறும் நிரந்தர வீடுகளற்றவர்களா தொடர்பில் ஆராய்ந்து பரிந்துரை ஒன்றை முன்வைக்குமாறு, நகர மேயர் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை நகர சபை உறுப்பினரொருவரால் அவரது உறவினர்கள், வேண்டப்பட்டவர்களுக்கு 5 வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் குறித்த 22 வீடுகள் வழங்கும் நடவடிக்கையை இடைநிறுத்தியுள்ள மேல் மாகாண ஆளுநர் முஸம்மில், எதன் அடிப்படையில் குறித்த வீடுகள் கையளிக்கப்படுவது தொடர்பில், அறிக்கையொன்றை கோரியுள்ளார்.
8 hours ago
9 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
9 hours ago
9 hours ago