2025 ஜூலை 07, திங்கட்கிழமை

கொழும்பு - யாழ். விமான சேவைகள் ஆரம்பம்

Editorial   / 2020 பெப்ரவரி 01 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு பயணிகளை ஏற்றிச் செல்லும் விமானச் சேவைகள் இன்று (01) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய ஒவ்வொரு சனி, திங்கள், புதன் கி​ழமைகளில் கொழும்பு இரத்மலானை விமான நிலைத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கான விமானப் பயணங்கள் மேற்கொள்ளபடும் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

ஒரு சுற்றில் 70 பயணிகளை ஏற்றிச் செல்ல முடியுமெனவும்,  இஷட் - ஏவியேஷன் என்ற விமானத்தில் மூலமே சேவைகளை முன்னெடுக்க உள்ளதாக இரத்மலானை விமான நிலையத்தின் பணிப்பாளர் அருண  ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். 

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக அதிக பயணிகளை யாழ்ப்பாணம் வரையில் ஏற்றிச் செல்லும்  முதல் விமானப் பயணமாக இதுவே அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார். 

அத்துடுன் மேற்குறிப்பிட்ட தினங்களில் காலை 7.30 க்கு இரத்மலானை விமான நிலையத்திலிருந்து புறப்படும் குறித்த பயணிகள் விமானம் மீண்டும் 10.30 மணிக்கு இரத்மலானையை வந்த​டையுமெனவும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் யாழ்ப்பாணம்  - சென்னைக்கான விமான சேவையொன்று யாழ்.சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் கொழும்பிலிருந்து சென்னை பயணிக்க உள்ளோரை யாழ்ப்பாணத்துக்கு அழைத்து செல்லும் நோக்கிலேயே மேற்படி விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

 

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .