Janu / 2026 ஜனவரி 21 , பி.ப. 12:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு, விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விசேட ஞாபகார்த்த முத்திரை, விசேட ஞாபகார்த்த உறை, தபால் அட்டைகள் வெளியீடு
2026 மார்ச் 24ம் திகதியன்று கொண்டாடப்படவுள்ள கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விசேட ஞாபகார்த்த முத்திரையுடன் கூடிய விசேட ஞாபகார்த்த உறை மற்றும் இரண்டு விசேட தபால் அட்டைகளை பழைய மாணவர் சங்கம் ஊடாக வெளியிட 1995 ஆம் ஆண்டு சாதாரண தரம் மற்றும் 1998 ஆம் ஆண்டு உயர்தரம் பயின்ற முன்னாள் மாணவர்கள் தீர்மானித்துள்ளனர்.
இலங்கை அஞ்சல் திணைக்களத்தின் முத்திரைப் பணியக வெளியீடாக இந்த முத்திரை வெளியீட்டு நிகழ்வு இடம்பெறவுள்ளதுடன் பழைய மாணவர் சங்கத்தின் மேற்பார்வையின் கீழ் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது. இதற்கான முழுமையான நிதி அனுசரணையை 1995 ஆம் ஆண்டு சாதாரண தரம் மற்றும் 1998 ஆம் ஆண்டு உயர்தரம் பயின்ற முன்னாள் மாணவர்கள் வழங்கியுள்ளனர்.
கல்லூரியில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் விசேட ஞாபகார்த்த உறைகள் வழங்கப்படவுள்ளதுடன், கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் தபால் அட்டைகள் இலவசமாக வழங்கப்படவுள்ளன.
அத்துடன் பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் உள்ளிட்டவர்களிடையே விற்பனை செய்யப்படவுள்ள விசேட ஞாபகார்த்த முத்திரையுடன் கூடிய விசேட ஞாபகார்த்த உறை மற்றும் இரண்டு தபால் அட்டைகள் மூலம் கிடைக்கும் நிதி பாடசாலை மாணவர்களின் கல்வி மேம்பாட்டு செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்படும் என ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.
1926 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24ம் திகதி கொழும்பில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது தமிழ் பாடசாலையான விவேகானந்தா கல்லூரியின் சார்பில் வெளியிடப்படும் முதலாவது முத்திரைப் பதிப்பு இதுவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2026 மார்ச் 24ம் திகதி வெளியிடப்படவுள்ள இந்த முத்திரை தொடர்பான ஆவணங்களை கல்லூரி அதிபர் மூ. மூவேந்தனிடம் கையளித்த 1995 ஆம் ஆண்டு சாதாரண தரம் மற்றும் 1998 ஆம் ஆண்டு உயர்தரம் பயின்ற
மாணவர்கள் அதற்கான அனுமதியை பெற்றனர். இந்நிகழ்விற்கு பழைய மாணவர் சங்க செயலாளர் க. முருகானந்தனும் கலந்துகொண்டார்.

9 hours ago
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
22 Jan 2026