Editorial / 2019 ஜூன் 18 , பி.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த ரிட் மனு, திருத்தத்துக்கான மனு என்பன விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமலேயே நிராகரிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
ஹம்பாந்தோட்டை- மெதமுலன டீ.ஏ. ராஜபக்ஷ நினைவு அருங்காட்சியகத்தை அமைக்கும் போது, 34 மில்லியனுக்கும் அதிகமான அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக கோட்டாவுக்கு எதிராகக் குற்றஞ்சுமத்தப்பட்டு, தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குத் தொடர்பில், மூவரடங்கிய விசேட மேல்நீதிமன்றம் வழங்கிய உத்தரவை வலுவற்றதாக்கும் கட்டளைகளை வெளியிடுமாறுக் கோரி, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த ரிட் மனுவே விசாரணையின்றி நிராகரிக்கப்பட்டுள்ளது.
அச்சல வெங்கபுலி, அர்ஜுன ஒபேசேகர ஆகிய மேன்முறையீட்டு நீதிபதிகள் குழாத்தால் ,இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
37 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago