2025 ஜூலை 05, சனிக்கிழமை

கோட்டை - காங்கேசன்துறை ரயில் சேவைகள் நிறுத்தம்

Editorial   / 2019 டிசெம்பர் 30 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு  கோட்டைக்கும்  காங்கேசன்துறைக்கும் இடையில் முன்னெடுக்கப்பட்டு வந்த,  இரண்டு ரயில் சேவைகளை,  நாளை(31) முதல் நிறுத்துவதற்கு  ரயில்வே  திணைக்களம்  தீர்மானித்துள்ளது.

இதற்கமைய,  87, 88 இலக்கங்களைக் கொண்ட  ரயில்கள்,  நாளை (31) முதல் சேவையில் ஈடுபடாதென அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள  வீழ்ச்சி காரணமாகவே,  இந்தத் தீர்மானத்தை  எடுத்துள்ளதாக,  ரயில்வே  திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்குப் பதிலாக,  இரண்டு ரயில்கள் கொழும்பு, கோட்டைக்கும் தலைமன்னாருக்கும் இடையில் சேவையில் ஈடுபடுமென, திணைக்களம் அறிவித்துள்ளது.

ஜனவரி முதலாம் திகதி முதல், மேற்குறிப்பிட்ட இரண்டு ரயில்களும் சேவையில் ஈடுபடுமென திணைக்களம் தெரிவித்துள்ளதுடன்,  கோட்டை ரயில் நிலையத்திலிருந்து  இரவு 7:15 மணியளவில் புறப்பட்டு,  அதிகாலை 3:25 மணியளவில் தலைமன்னாரைச் சென்றடையும் எனவும் தெரிவித்துள்ளது.

மீண்டும் தலைமன்னாரிலிருந்து,  இரவு 8:25 மணியளவில்  பயணத்தை ஆரம்பித்து, காலை 4:40 மணிக்கு கொழும்பு-  கோட்டையை வந்தடையுமென,  ரயில்வே திணைக்களம்  தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .