2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

Editorial   / 2019 செப்டெம்பர் 06 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோதுமை மாவின் விலையை அதிகரிக்க பிரிமா நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய, இன்று (06) நள்ளிரவு முதல் கோதுமை மா கிலோகிராம் ஒன்றின் விலை 5.50 ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளதாகவும், இது தொடர்பில், நாடு முழுவதுமுள்ள பிரிமா மா விநியோகத்தர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

எவ்வாறாயினும், நுகர்வோர் அதிகார சபையின் அனுமதியின்றி இவ்வாறு கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் உரிமையை பாதுகாக்கும் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

2016ஆம் ஆண்டு ஜுலை மாதம் 14 ஆம் திகதி வெளியிடப்பட்ட 1975/68 என்ற விசேட வர்த்தமானி அறிவித்தலின்படி, அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள கோதுமை மாவின் விலையை அதிகரிப்பது தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையின் அனுமதி பெறப்படவேண்டும் என, அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .