Freelancer / 2025 நவம்பர் 01 , பி.ப. 04:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் உள்ள காசிபுக்காவில் தனியார் நிர்வகித்து வரும் வெங்கடேஸ்வரா சுவாமி கோயிலில் கூட்டநெரிசலில் சிக்கி 9 பக்தர்கள் பலியாகினர்.
ஓராண்டுக்கு முன் கட்டப்பட்ட இந்த கோயிலில் இன்று ஏகாதசி மற்றும் சனிக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.
அப்போது கூட்ட நெரிசலில் திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனால் அங்கிருந்த தடுப்பு கம்பி விழுந்ததில் ஒருவர் மீது ஒருவர் கீழே விழுந்தனர். இதில் மூச்சுத்திணறி 9 பக்தர்கள் இறந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், படுகாயம்அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலர் ஆபத்தான நிலையில் உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதுகுறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். R
26 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
2 hours ago