Janu / 2025 ஜூலை 10 , மு.ப. 09:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருமலை திருப்பதி கோவிலில் பணிபுரியும் உதவி நிர்வாக அதிகாரி ஒருவர் தேவாலய பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்டதால் உடனடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
உதவி நிர்வாக அதிகாரியான ராஜசேகர் பாபு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தனது சொந்த ஊரான புத்தூரில் உள்ள உள்ளூர் தேவாலய பிரார்த்தனைகளில் கலந்துகொண்டதாகவும், கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டதைத் தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேவாலயத்திற்குச் சென்று ராஜசேகர் பாபு பிரார்த்தனை செய்யும் வீடியோ தேவஸ்தானத்தின் கவனத்திற்கு வந்ததாக கோவில் நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்து மதம் அல்லாத மத நடவடிக்கைகளில் பங்கேற்கும் ஊழியர்கள் மீது திருப்பதி கோவில் நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. முன்னதாக, இதே போன்ற காரணங்களுக்காக ஆசிரியர்கள், தொழில்நுட்ப அதிகாரிகள், செவிலியர்கள் மற்றும் பிற அதிகாரிகள் உட்பட குறைந்தது 18 ஊழியர்களை இடமாற்றம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


9 hours ago
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
04 Nov 2025