2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

சு.க உறுப்பினர்களுடன் ஜனாதிபதி இன்று பேச்சு

Gavitha   / 2016 ஏப்ரல் 20 , மு.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் சகல மாகாண சபைகளிலும் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்குமிடையில், இன்று 20ஆம் திகதி புதன்கிழமை, முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவிருக்கின்றது.

ஜனாதிபதி செயலகத்திலேயே இச்சந்திப்பு, இன்றிரவு 7 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இந்தச் சந்திப்பின் போது, தற்போதைய அரசியல் நிலைவரம், மேதினக் கூட்டம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கூட்டு எதிரணியினர், கொழும்பு-05, கிருலப்பனையில் நடத்தவிருக்கின்ற மே தினக் கூட்டம்
தொடர்பிலான விசேட பேச்சுவார்த்தை, முன்னாள் ஜனாதிபதியும் எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில், எதிர்வரும் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கின்றது.

பத்தரமுல்லையில் உள்ள அவரது காரியாலயத்திலேயே, இந்த விசேட பேச்சுவார்த்தை இடம்பெறவிருக்கின்றது.

இதேவேளை, காலியில் நடத்தப்படவிருக்கின்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக்கூட்டத்தில் பங்கேற்குமாறு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீரவினால், இக்கடிதம் 18ஆம் திகதி திங்கட்கிழமையன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X