Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Kanagaraj / 2015 நவம்பர் 24 , மு.ப. 02:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
2016ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும், திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிக்கவேண்டும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சு.க உறுப்பினர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான விசேட நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பில் கலந்து கொண்ட உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக வாகனம், சாரதி, எரிபொருள் மற்றும் ஒதுக்கீடுகள் தொடர்பில், ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளனர் என்று அறியமுடிகின்றது.
இந்நிலையில், இந்த வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவளிப்பதா அல்லது இல்லையா என்பது தொடர்பில்
தீர்மானிப்பதற்கு, இன்று 24ஆம் திகதி விசேட கூட்டமொன்றைக் கூட்டுமாறு ஜனாதிபதியிடம், நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம கேட்டுக்கொண்டுள்ளார்.
இன்றைய கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் செயற்படும் இணைந்த எதிர்க்கட்சியில், மஹிந்த ராஜபக்ஷவைத் தவிர ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் எம்.பிக்கள் 49 பேரும் கலந்துகொள்ளவுள்ளதாக அறியமுடிகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
7 hours ago