Princiya Dixci / 2017 ஏப்ரல் 08 , மு.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
நெவில் பெர்ணான்டோ போதனா வைத்தியசாலையை, சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக, உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு, நேற்றுத் தெரிவித்துள்ளது.
உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் பதில் செயலாளர் செயலாளர் ஜயந்தி விஜேதுங்கவினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ் வைத்தியசாலையை, தொடர்ந்தும் போதனா வைத்தியசாலையாகவே கொண்டு நடத்தப்படுமெனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியில் இறுதி மருத்துவ பட்டப்படிப்பை நிறைவு செய்த மாணவர்களுக்கு, ஹோமாகம மற்றும் அவிசாவளை ஆகிய வைத்தியசாலைகளில் உள்ளகப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சைட்டம் மாணவர்களுக்கு சத்திரசிகிச்சை, மருத்துவம், மகப்பேறு, குழந்தைகளுக்கான சிகிச்சை உள்ளிட்ட பயிற்சிகளும் வழங்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சைட்டம் மாணவர்கள் வைத்தியர்களாக தம்மை பதிவு செய்து கொள்வதற்கு இலங்கை மருத்துவ ஆணைக்குழு மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் இணைந்து நடத்தப்படும் பரீட்சைக்கு தோற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago