Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2017 பெப்ரவரி 02 , மு.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனனி ஞானசேகரன்
“மாலபேயில் அமைந்துள்ள தொழில்நுட்பம் மற்றும் மருத்துவத்துக்கான தெற்காசிய நிறுவகத்துக்கு (சைட்டம்) அங்கிகாரம் அளிப்பது, இலங்கையின் கல்வித்தரத்தை அரிக்கும். அதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். இந்தத் தீர்ப்பானது, சட்டத்துக்கு விரோதமானது என, ஜே.வி.பி குற்றுஞ்சாட்டியுள்ளது.
சுகாதார அமைச்சின் மருமகள், சைட்டத்தில்தான் கற்கிறார், ஜே.வி.பி, ஈ.பி.பி.டி ஆகிய இரண்டு கட்சிகளையும் தவிர, ஏனையக் கட்சிகளைச்சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவர்களின் உறவினர்கள் உள்ளிட்டோர் இங்குதான் கல்விப்பயிலுகின்றனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சியின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, பிமல் ரத்னாயக்க எம்பி, மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து கருத்துரைக்கையில்,
“மாலபேயில் அமைந்துள்ள தனியார் வைத்திய கல்லூரி (சைட்டம்) தொடர்பான வழக்கின் இரு தரப்பினரும், சைட்டத்தை ஆதரிப்பவர்கள். அதனால், மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு புதுமையானது அல்ல, அது எதிர்ப்பார்க்கப்பட்ட ஒன்று தான்” என்றார்.
“நீதிமன்ற தீர்ப்பின் மூலமாக ஒருவர், வைத்தியராக வர முடியாமாயின், எமது கிரிக்கெட் சபைக்கும் ஒருவரை இணைத்துக்கொள்ள முடியுமாக இருக்கும்” என்றார்.
சைட்டத்திலிருந்து வெளியேறுகின்ற பட்டதாரிகளை, வைத்தியராக பதிவுசெய்யவேண்டுமாயின், தேசிய வைத்திய சபை அதற்கு அனுமதியளிக்க வேண்டும்.
நல்லாட்சி அரசாங்கத்தின் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, சைட்டத்துக்கு ஆதரவான நடவடிக்களையே மேற்கொண்டு வருகின்றார். சுகாதார அமைச்சரின் மகன் மற்றும் மருமகள் ஆகிய இருவரும் சைட்டம் நிறுவனத்திலே கல்விக் கற்கின்றார்கள். அவ்வாறான நிலையில், சுகாதார அமைச்சர் சைட்டத்தை எதிர்க்கமாட்டார்.
பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் பொய் சொல்லி தவறான முறையில் நடத்தப்படுகின்ற இந்நிறுவனத்துக்கு சார்பாக வழங்கிய தீர்ப்பு தவறானதாகும.
இந்நிறுவனத்துக்கு, மஹிந்த ராஜபக்ஷவே அனுமதிப்பத்திரம் வழங்கினார். அது தவறான ஒரு விடயமாகும், ஆனால், தற்போது நடைபெறுகின்ற விடயங்களுக்கான முழு பொறுப்பினையும் ஜனாதிபதி மைதிரிபாலவே ஏற்றுக்கொள்ளவேண்டும்.
இலங்கை போன்ற சிறிய நாட்டுக்குள், தனியார் மருத்துவக் கல்லூரி தேவை இல்லை. வைத்தியர்களுக்கான தட்டுப்பாடு எமது நாட்டில் தற்போதைக்கு இல்லை. இந்தியாவில், இது போன்று தனியார் வைத்திய கல்லூரிகள் காணப்படுவதனால்தான் இந்திய நாட்டு மருத்துவர்களுக்கு மதிப்பு இல்லாமல் போய்விட்டது” என்றார்.
மாலபேயில் அமைந்துள்ள தொழிநுட்பம் மற்றும் மருத்துவத்துக்கான தெற்காசிய நிறுவகத்தில், மருத்துவப் பட்டம் பெற்று வெளியேறுகின்றவர்கள், தொழில் நெறிஞர்களாக, இலங்கை வைத்திய சபையில் பதிவு செய்வதற்கான உரிமை உண்டு என, மேன்முறையீட்டு நீதிமன்றம், செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
11 minute ago
17 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
17 minute ago
23 minute ago