2025 மே 21, புதன்கிழமை

சித்திரவதை செய்த பொலிஸ் அதிகாரிகளுக்கு 7 வருட கடூழியச் சிறை

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 04 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ் காவலிலிருந்தபோது, இருவரைச் சித்திரவதை செய்ததாகக் கூறப்படும் கண்டி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரு பொலிஸ் அதிகாரிகளுக்கு தலா ஏழுவருட கடூழியச் சிறை தண்டனை விதித்து, கண்டி மேல் நீதிமன்ற நீதிபதி மனக விஜேசுந்தர, நேற்று வியாழக்கிழமை(03) தீர்ப்பளித்தார்.

பொலிஸ் அதிகாரிகளான நிஹால் ராஜபக்ஷ மற்றும் டபிள்யூ.எம். பாலசூரிய ஆகிய இருவரும் தமது தடுப்புக்காவலிலிருந்த, ரோஹித லியனகே மற்றும் சரத் பண்டார ஆகிய இருவரையும் 2005.07.28 அன்று சித்திரவதை செய்ததாக கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

பாதிக்கப்பட்டோர் சார்பில், கண்டி மனித உரிமைகள் அமைப்பு அடிப்படை உரிமை மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தது.

இவ்வழக்கு, நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குறித்த பொலிஸ் அதிகாரிகளை குற்றவாளிகளாக இனங்கண்ட நீதிபதி மேற்கண்ட தீர்ப்பை வழங்கினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .