2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

சுத்தமான குடிநீர் கிடைக்காவிடின் 117க்கு அழைக்கவும்

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 26 , மு.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, பொலன்னறுவை, திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மொனராகலை ஆகிய மாவட்டங்களில் நிலவும் வரட்சியான வானிநிலை காரணமாக, சுத்தமான குடிநீரை விநியோகிப்பதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்ளவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. 

அவ்வாறு சுத்தமான குடிநீர் விநியோகம் கிடைக்காவிடின், 117 என்ற அவசர இலக்கத்துக்கு அழைப்பை எடுத்து அறிவிக்குமாறும் அந்நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த இலக்கம், 24 மணிநேரமும் செயற்படும் என்றும் அறிவித்துள்ளது.  மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில், பல பிரதேசங்களில் சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் பெரும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளமையால், பவுசர்கள் மூலமாகவே சுத்தமான குடிநீர் விநியோகிக்கப்படுகின்றது என்றும் அந்த மத்திய நிலையம் அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .