Editorial / 2026 மார்ச் 06 , பி.ப. 02:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

2026 ஆம் மற்றும் 2027 ஆம் கல்வி ஆண்டுக்குரிய உயர்தர (Grade 12) தொழிற்கல்வித் துறைக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு கோரியுள்ளது.
இந்தத் தொழிற்கல்வி திட்டத்தின் சிறப்பம்சமாக, க.பொ.த (சாதாரண தர) பரீட்சை பெறுபேறுகள் அனுமதிக்கு கருத்திற் கொள்ளப்படமாட்டாது. 2025, 2026 அல்லது கடந்த மூன்று ஆண்டுகளுக்குள் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள், தமது பிரதேசத்தில் இந்தத் துறை வழங்கப்படுபடும் பாடசாலைகளில் இணைந்து கொள்ள முடியும் என அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த கல்வி திட்டத்தின் மூலம் தரம் 12 இல் இணைந்துக்கொள்ளும் மாணவர்கள் மென் திறன்கள் ((Soft Skills) மற்றும் பல்வேறு தொழிற்துறை சார்ந்த அறிமுக பாடங்களைக் கற்பார்கள்.
தரம் 13 இல் அரச தொழிற்பயிற்சி நிறுவனங்களில் நேரடிப் பயிற்சி மற்றும் நிறுவன ரீதியான வேலைத்தளப் பயிற்சிகளை (Workplace-based training) பெறுவார்கள்.
இக்கல்வி முடிவில் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட NVQ மட்டம் 4 (NVQ Level 4) சான்றிதழ் வழங்கப்படும்.
சுற்றுலா மற்றும் விருந்தோம்பல், வாகன தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் (IT), சுகாதார சேவைகள், ஆடை வடிவமைப்பு, அழகுக்கலை, மின்சாரம் மற்றும் இலத்திரனியல், விவசாயம், விளையாட்டு, மற்றும் விற்பனை முகாமைத்துவம் உள்ளிட்ட 26 இற்கும் மேற்பட்ட பல்வேறுபட்ட தொழிற் துறைகளில் மாணவர்கள் பயிற்சிகளைப் பெற முடியும்.
இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்விக்கான ((Degree/HND) வாய்ப்புகள். சுயதொழில் முயற்சிகளுக்கான (Entrepreneurship) வழிகாட்டல்கள் ஆகியவை கிடைக்கப்பெறும்.
ஆர்வமுள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் விண்ணப்பப்படிவம் மற்றும் மேலதிக விபரங்களை கல்வி அமைச்சின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான www.moe.gov.lk இல் (Special Notices பிரிவில்) பெற்றுக்கொள்ளமுடியும் என்பதோடு, 0112 787136 ஃ 0112 786746 ஆகிய இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் directorefa@moe.gov.lk என்ற மின் அஞ்சல் முகவரியின் வாயிலாகவும் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என்பதோடு, 'அனைவருக்கும் கல்வி' கிளை, கல்வி அமைச்சு, இசுருபாய, பத்தரமுல்ல என்ற முகவரிக்கு வருகை தந்தும் விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும்.
1 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
7 hours ago