2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

சுதந்திர தின நிகழ்வு ஆரம்பம்

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 04 , மு.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜே.ஏ. ஜோர்ஜ்

இலங்கையின் 69ஆவது சுதந்திர தின நிகழ்வு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு - காலி முகத்த்திடலில் தற்போது ஆரம்பமாகியுள்ளது. 

தேசிய ஒற்றுமை எனும் தொனிப்பொருளில் நடைபெறும் இந் நிகழ்வில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண ஆளுநர்கள், முதலமைச்சர்கள், உள்நாட்டு, வெளிநாட்டு தூதுவர்கள், இராஜதந்திரிகள் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் வருகைதந்துள்ளனர்.

சர்வ மத தலைவர்களில் வழிபாடுகளுடன் ஆரம்பமாகியுள்ள இந்நிகழ்வின் முதலாவது அம்சமாக முப்டையினர் மற்றும் பொலிஸாரின் அணிவகுப்பு இடம்பெறுகின்றது. 

7,882 சிப்பாய்கள், இந்த அணிவகுப்பில் கலந்துகொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X