2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

சீனாவிடமிருந்து இலங்கைக்கு போர் உதவி

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 19 , மு.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

120 மில்லியன் ரென்மின்பி பெறுமதியான போர் உதவிகளை வழங்க, சீன அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.  

அத்துடன், இலங்கையின் கடலோரப் பாதுகாப்புக்கான ரோந்துக் கப்பலொன்றை வழங்குவது தொடர்பான ஒப்பந்தமொன்றும், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி உள்ளிட்ட, பாதுகாப்பு உயரதிகாரிகள் சிலர், சீனாவுக்கான விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளனர்.  

பாதுகாப்புத் துறையின் ஒத்துழைப்பை, மேலும் பலப்படுத்திக்கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இந்த விஜயத்தின் போது, சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான இர​ண்டாம்கட்டப் பேச்சுவார்த்தையும் இடம்பெற்றது.  

பாதுகாப்புப் படையினருக்கான பயிற்சி ஒத்துழைப்பு, தகவல் பரிமாற்றம், ஒன்றிணைந்த போர்ப் பயிற்சிகள் உள்ளிட்ட, பாதுகாப்புடன் தொடர்புடைய அனைத்துப் பிரிவுகள் தொடர்பிலும், இந்தப் பேச்சுவார்த்தையின் போது கலந்துரையாடப்பட்டதாக, பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .