2025 மே 19, திங்கட்கிழமை

சுரங்க மாளிகை எனக்கானது அல்ல: மஹிந்த

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 25 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ள அதிசொகுசான நிலகீழ் சுரங்க மாளிகை தனக்கானது அல்ல என்று முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகைக்கு கீழே அமைக்கப்பட்டுள்ள நிலக்கீழ் சுரங்க மாளிகை தொடர்பிலான படங்கள், சமூக வலைத்தளங்கள் மற்றும் செய்தி தளங்களில் வெளியாகியுள்ளன.

இந்நிலையிலேயே, இது தொடர்பில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.  

கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் அமைக்கப்பட்ட இரகசிய நிலக்கட்டடமானது தனக்காக அமைக்கப்பட்டதில்லை. இது ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்க முக்கியஸ்தர்களின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டதாகும் என்றார்.

மேலும், யுத்தத்த காலத்தில், பாதுகாப்புக் குழு கூட்டத்தையும் இந்த நிலக் கீழ் கட்டடத்திலேயே நடத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.  

புலிகளிடம், வான் வழியாக தாக்குதல் நடத்தும் விமானங்கள் இருந்தன, கப்பல்கள் இருந்தன, அவற்றிலிருந்து அச்சுறுத்தல்கள் இருந்தன. அவற்றுக்கெல்லாம் முகங்கொடுக்கும் வகையிலேயே இந்த பாதுகாப்பு அரண் அமைக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X