2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

சிறுவன் தப்பியோட்டம்

Princiya Dixci   / 2016 நவம்பர் 10 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாணந்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிறுவர் இல்லமொன்றிலிருந்த சிறுவனொருவன், நேற்றுப் புதன்கிழமை (09) தப்பியோடியுள்ளதாகப் பாணந்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

மீகாதென்னப் பகுதியைச் சேர்ந்த, தினேஸ் சத்துரங்க என்ற 17 வயதுடைய இச் சிறுவன், நீதிமன்றமொன்றின் கட்டளையூடாகவே குறித்த இல்லத்தில் சேர்க்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

5 அடி உயரமுடைய இச் சிறுவன், தப்பியோடிய வேளையில் சிவப்பு நிற ரிசேர்ட்டும் பச்சை நிறக் காற்சட்டையும் அணிந்திருந்ததாகத் தெரிவித்த பொலிஸார், சிறுவரைக் கட்டுபிடிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .