Princiya Dixci / 2015 ஒக்டோபர் 27 , மு.ப. 06:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

'பிரகாசமான சிறுவர் உலகுக்கு பாதுகாப்பான நாளை' என்ற தொனிப்பொருளில் இந்த சிறுவர் பாதுகாப்பு வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
குறித்த வாரத்தில் பாடசாலை மட்டத்தில் சிறுவர் பாதுகாப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் மற்றும் பாடசாலை சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களை மேற்கொள்ளல் ஆகியவற்றை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை, பாடசாலைகளை மையப்படுத்தி போதைப்பொருள் விற்பனை செய்யும் இடங்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர கோரியுள்ளார்.
பாடசாலைகள் மற்றும் மாலை வகுப்புக்களுக்கு அருகில் போதை மருந்துகளை விற்பனை செய்வது தொடர்பாக கடந்த காலங்களில் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் பெற்றோர், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் மிக அவதானத்துடன் இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
41 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
56 minute ago