2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

சஜின் வாஸூக்கு பிணை

Kanagaraj   / 2016 செப்டெம்பர் 20 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

மிஹின் லங்கா நிறுவனத்துடனான கொடுக்கல் வாங்கலில் 833 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ்குணவர்தனவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துக்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைகுழுவினால், அவருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அவர், இரண்டறை இலட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான நான்கு சரீரப் பிணைகளிலும் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு, கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டியவினால் முன்னிலையில், இன்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோதே, அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .