2026 மே 14, வியாழக்கிழமை

சஜித்துடன் தொடர்பிலிருந்த 15 எம்.பிக்கள் சிக்கினர்

Niroshini   / 2021 மே 25 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸவுடன் தொடர்பில் இருந்த சுமார் 15 பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற வளாகத்திலுள்ள சிசிடிவி கமெராக்களின் உதவியுடன் கண்டறியப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, அவர்கள் அனைவரையும் சுயதனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ள பாராளுமன்றத்தின் பிரதம படைக்களச் சேவிதர், பிசிஆர் பரிசோதனையையும் மேற்கொள்ளுமாறு அறிவித்துள்ளார் என, பாராளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல், பாராளுமன்ற பணிக்கு உறுப்பினர்கள் சிலரும், எதிர்க்கட்சித் தலைவருடன் தொடர்பில் இருந்துள்ளனர் எனக் கண்டறியப்பட்டுள்ள நிலையில், அவர்களும் தனிமைப்படுத்தலுக்கு உள்வாங்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவருடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தார்கள் என்ற அடிப்படையில், பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வர், சுயதனிமைப்படுத்தலுக்கு இலக்காகியுள்ளனர்.

அந்த வகையில், லக்ஷ்மன் கிரியெல்ல, அசோக் அபேசிங்க, ஹர்ஷ டீ சில்வா, துஷார இந்துனில் ஆகியோரே, இவ்வாறு சுய தனிமைப்படுத்தலுக்கு இலக்காகியுள்ளனர் என்றும் இவர்களுக்கான பிசிஆர் பரிசோதனைகள், இன்று (25) முதல் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .