Editorial / 2019 ஒக்டோபர் 01 , பி.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்தனவுக்கு எதிராக நிதி தூய்மையாக்கல் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை நாளாந்தம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (01) உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி தொடக்கம் இந்த வழக்கு நாளாந்தம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2010 தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 30 கோடியே 62 இலட்சம் ரூபாய்க்கும் அதிக நிதியை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாக சஜின் வாஸ் குணவர்தனவுக்கு எதிராக சட்டமா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
13 Mar 2026
13 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 Mar 2026
13 Mar 2026