2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

சட்டத்தைச் செயற்படுத்த முறைப்பாடு இல்லை: ருவன் குணசேகர

Thipaan   / 2016 ஏப்ரல் 25 , பி.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், இராணுவ முகாமுக்குள் அத்துமீறி நுழைந்தமை தொடர்பில் இதுவரையிலும் எழுத்துமூலமான முறைப்பாடு எதுவும் கிடைக்கவில்லை என்று தெரிவித்த பொலிஸ் ஊடகப்பேச்சாளர் உதவி பொலிஸ் அதிகாரி ருவன் குணசேகர, அதனால், அவருக்கு எதிராகச் சட்டத்தை அமுல்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான குழுவினர், கிளிநொச்சி பரவிபாஞ்சானில் அமைந்துள்ள கஜபா படைப்பிரிவு இராணுவ தலைமையகத்துக்குள், கடந்த 16ஆம் திகதியன்று அல்லது அதற்கு அண்மித்த தினத்தில் சென்றிருந்தனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் வாகனம் முன்பாக பயணிக்க, எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், தன்னுடைய உத்தியோகபூர்வ வாகனத்தில், அந்தப் படையணியின் தலைமையகத்துக்குள் நுழைந்துள்ளார். பொலிஸ் வாகனம் முன்னால் பயணித்தமையால், அந்த படைப்பிரிவின் பிரதான வாயிலில் பாதுகாப்பு கடமையில் இருந்த இராணுவ வீரர், பின்னால் வந்த வாகனங்களையும் படைப்பிரிவுக்குள் நுழைவதற்கு அனுமதியளித்துள்ளார் என்றும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X