2025 மே 17, சனிக்கிழமை

சட்டத்தரணியின் கட்டணத்துக்கு காதணிகளை பெற்ற கொடுமை

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 08 , மு.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

சந்தேகநபரான கணவனுக்கான மனுவொன்றை தாக்கல் செய்வதற்காக வழக்கு கட்டணமாக  பெண்ணொருவரின் காதணிகள் இரண்டை பெண் சட்டத்தரணிகள் இருவர் பெற்றுக்கொண்ட சம்பவமொன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றதில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டியவுக்கு அறிக்கையிடப்பட்டதன் பின்னர் அவ்விரு பெண் சட்டத்தரணிகளையும் அழைத்த பிரதான நீதவான் அவ்விருவரிடம் இதுதொடர்பில் கேட்டறிந்ததுடன் இரண்டு சட்டத்தரணிகளையும் கடுமையாக எச்சரித்துள்ளதாக அறியமுடிகின்றது.

காதணிகளைக் கழற்றி கொடுத்த அந்த பெண்ணையும் அழைத்த பிரதான நீதவான், இந்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் உள்ள பொலிஸ் சோதனை சாவடியில் முறையிடுமாறும் கட்டளையிட்டுள்ளார்.

அலைபேசியை திருடிய குற்றச்சாட்டு தொடர்பில் மனுவொன்றை தாக்கல் செய்வதற்கு  தானும் தனது கணவனும் நீதிமன்றத்துக்கு வருகைதந்ததாகவும். மனுவை தாக்கல் செய்வதற்காக சட்டத்தரணிக்கு வழங்கவேண்டிய பணம் தன்னிடம் இருக்கவில்லை என்றும் இதனையடுத்தே இவ்விரு சட்டத்தரணிகளும் தனது காதணிகளை கேட்டதாகவும் அப்பெண் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

தனது ஒரு காதணியின் சுரை இருக்கமாக இருந்ததாகவும் அதனை கழற்றுவதற்கு நேரம் எடுத்தமையால் அந்த சட்டத்தரணிகள் இருவரும் தன்னை ஏசியதாகவும் முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நீதிமன்ற வளாகத்தில் உள்ள தண்ணீர் இருக்கும் இடத்துக்கு சென்று காதுக்கு தண்ணீரை ஊற்றி, ஊற்றி கழற்றுவதற்கு முயற்சித்துகொண்டிருந்த போது இவ்விரு சட்டத்தரணிகளும், தங்களுக்கு வேறு வழக்குகள் இருக்கின்றன. என்றும் காதணியை விரைவாக கழற்றுபடியும் கோரியுள்ளதாக அப்பெண் தன் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

அந்தப்பெண், தனது காதணிகளை கழற்றி அவ்விரு சட்டத்தரணிகளிடமும் கையளிக்கும் போது நீதிமன்றத்தில் இருந்த ஏனைய சட்டத்தரணிகள் அதனை கண்டுவிட்டதாகும். அதன்பின்னரே பிரதான நீதவானின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .