J.A. George / 2021 மார்ச் 21 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
வீதிப் போக்குவரத்துச் சட்டங்களை மீறுவோருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கையை விரிவுபடுத்த உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
நாடு பூராகவும் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் மதுபோதையில் மற்றும் கவனயீனமான முறையில வாகனத்தைச் செலுத்துபவர்கள் சம்பந்தமாக இதன்போது கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்றும் பொலிஸ் ஊடாகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, பஸ், டிப்பர், ஓட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள் மூலமாக இடம்பெறும் விபத்துகளைத் தவிர்ப்பதற்காக இறுக்கமான சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியிருப்பதாகவும் இது பற்றி தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஆராய்ந்து வருவதாகவும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
26 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
1 hours ago