2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

சட்டவிரோதமாக இயங்கி வந்த விபசார விடுதி ; மூவர் கைது

Editorial   / 2018 டிசெம்பர் 19 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொள்ளுப்பிட்டி, கிளிபர்ட் ஒழுங்கையில் அமைந்துள்ள இரண்டுமாடி வீடொன்றில் இயங்கி வந்த விபசார விடுதியொன்றிலிருந்து சீனா பிரஜையொருவரும், வியட்நாம் பிரஜையொருவரும் மற்றும் பல்கலைக்கழக மாணவியொருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற தகவலையடுத்து, குறித்த இடத்தில் சுற்றிவளைப்பை மேற்கொண்ட போதே, குறித்த மூவரும் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் வியட்நாமை சேர்ந்த பெண், சுற்றுலா வீசா மூலமாக, மூன்று முறை இலங்கைக்கு வந்துள்ளதாகவும், யுவதியொருவருக்கு 50ஆயிரத்திலிருந்தும் அதற்கு மேலாகவும் பணம் வழங்கப்படுவதாகப் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

அத்தோடு, கைது செய்யப்பட்ட குறித்த பல்கலைக்கழக மாணவியை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .