2025 ஜூலை 09, புதன்கிழமை

’சத்தியத்தை மைத்திரி மீறிவிட்டார்’

Editorial   / 2018 நவம்பர் 10 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த ஆட்சிக் கதிரையில் அமர்வதற்கு முழு ஒத்துழைப்பையும் வழங்கியிருந்த வண. சோபித தேரரின் பூதவுடல் மீது செய்த சத்தியத்தை, ஜனாதிபதி மீறிவிட்டார் என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன குற்றஞ்சாட்டியுள்ளார்.

அலரி மாளிகையில், நேற்று (09) நள்ளிரவு நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதாகக் கூறி, சோபித தேரரின் பூதவுடல் மீது சத்தியம் செய்த ஜனாதிபதி, அர​சமைப்பையும மீறி, நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி வருவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

19ஆவது திருத்தச்சட்டத்தைக் கொண்டு வந்தபோது, அதில் அதிக கரிசனை காட்டியவர் ஜனாதிபதியே என்று குறிப்பிட்ட அவர், ஆனால், தற்போது நிறைவேற்று அதிகாரத்தை மீறி, இல்லாத ஒரு அதிகாரத்தை ஜனாதிபதி பயன்படுத்தி வருவதாக அவர் மேலும் கூறினார்.

ஆனால், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இல்லாத அதிகாரங்களைப் பயன்படுத்தவில்லை என்றும் ஆனால், அரசமைப்பை மாற்றி, அதிலுள்ள அதிகாரங்களையே பயன்படுத்தினார் என்றும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .