2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

சந்தையில் சுவையூட்டி; அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 10 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தாண்டு காலப் பகுதியில், மனித உடலுக்குக் கேடு விளைவிக்கும் ஒரு வகை சுவையூட்டி, நாட்டின் பல பகுதிகளிலுமுள்ள  சந்தைகளில் விற்பனை செய்யப்படுவதாகவும், கோழி இறைச்சிச் சுவையுடைய இந்தப் புதிய சுவையூட்டி தொடர்பில், பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடனும் விழிப்புடனும் இருக்க வேண்டும் என்றும், அகில இலங்கை சிற்றுண்டிச் சாலை உரிமையாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த வகை சுவையூட்டியினைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் உணவு வகைகளை உண்டதன் பின்னர் அதிகம் தாகம் ஏற்படுவதாகவும் இதனால் மனித உடலுக்குக் கேடு விளைவதாகத் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், இது தொடர்பில் சுகாதார அமைச்சின் அவதானத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X