Freelancer / 2022 டிசெம்பர் 17 , பி.ப. 01:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் இருந்து சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அறவிடப்படும் 4,000 ரூபா காப்புறுதி நிதியை 713 ரூபாவாக அரசாங்கம் குறைத்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.
சபரிமலை யாத்திரை செல்லும் ஐய்யப்ப பக்தர்களுக்கு அறவிடப்படும் காப்புறுதியை குறைப்பதற்கு ஐ.தே.கவின் சிரேஷ்ட உறுப்பினர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் யோகராஜன், எஸ்.ஆனந்தகுமார் ஆகியோர் அரசாங்கத்துடன் பலகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட எஸ்.ஆனந்தகுமார்,
இம்மாத இறுதியில் சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு விசா கட்டணத்துக்கு மேலதிகமாக 4000 ரூபா காப்புறுதி நிதியும் செலுத்த வேண்டிய சூழ்நிலை காணப்படுகிறது.
இந்த நிதியை குறைந்தளவில் அறவிட வேண்டுமென வெளிவிவகார அமைச்சர் அலி சபரி, இந்திய உதவி உயர்ஸ்தானிகர், பௌத்த கலாசார திணைகளதின் செயலாளர் உட்பட உரிய தரப்பினரிடம் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.
பேச்சுவார்த்தைகளின் பிரகாரம் காப்புறுதி நிதியை 713 ரூபாவாக குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
மேட்டுத்தெரு ஸ்ரீராஐ ராஐராஐேஸ்வரி ஆலயத்தின் தலைவர் திருக்கேஷ் செல்லசாமி, ரவீந்திரன் குருசாமி, ரவீந்திர குமார் குருசாமி உள்ளிட்டவர்களும் இந்து கலாசார திணைக்களத்தின் அதிகாரிகளும் அரசாங்க அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. R
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago