R.Maheshwary / 2020 டிசெம்பர் 28 , பி.ப. 01:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிசிஆர் பரிசோதனை செய்து கொள்ளுமாறு சுகாதார பிரிவால் தன்னிடம் கோரிக்கை விடுக்கப்பட்டால், தான் அதனை செய்ய தயாராகவிருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
சபாநாயகரின் பாதுகாப்பு பிரிவின் பொலிஸார் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், சபாநாயகருக்கு பாதுகாப்பு வழங்கும் அதிகாரிகள் அனைவருக்கும் பிசிஆர் செய்யப்பட்டு, அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த மாதம் 31ஆம் திகதி தான் பிசிஆர் பரிசோதனை செய்துகொள்ளவுள்ளதாக, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சகோதர மொழி ஊடகமொன்றுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .