2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

சபையில் ஹெட்ஃபோன் ஜோக்

Editorial   / 2025 செப்டெம்பர் 11 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

சபை நடவடிக்கைகள் வியாழக்கிழமை (11) காலை  பத்து நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டு, மீண்டும் ஆரம்பிக்கபட்டாலும் எதிர்க்கட்சியினர் கூச்சலிடுகின்றனர்.

ஒரு கட்டத்தில் சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க சபைக்கு ஒவ்வாத வார்த்தைகளை பிரயோகித்தார் என்றும் அதை வாபஸ் பெற்றுக் கொள்ளுமாறு எதிர்க்கட்சியினர் கேட்டுக்கொண்டனர்.

இந்நிலையில், வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரம் ஆரம்பமானது. அதன்போது, சபைக்கு தலைமை தாங்கிய சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, கேள்விகளை கேட்டிருக்கும் உறுப்பினர்களின் பெயரை பல முறை கூறி, கேள்விகளை கேட்குமாறு அழைத்தார்.

அப்போது எழுந்த  ஒரு கட்டத்தில் சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க, சபாநாயகரே! நீங்கள் ஒரு முறைதான் அழைக்கவேண்டும். ஐந்து தடவைகள் அழைக்க​ ஏலாது என்றார்.

இதற்கிடையே, ரவி கருணாநாயக்கவை கேள்விக்கேட்குமாறு அழைத்தார். எழும்பிய ரவி கருணாநாயக்க கேட்க​வில்லையே சபாநாயகர், சபையில் அமைதியை ஏற்படுத்தித் தாருங்கள் என்றார்.

அதற்கு பதிலளித்த சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, ஹெட்ஃபோன் போடுங்கள், ஹெட்ஃபோனை போட்டுக் கொள்ளுங்கள் எனக் கேட்டுக்கொண்டார்.

சரி,சரி நான் போட்டுக்கொள்கின்றேன். ஆனால், குறுக்கு கேள்விகளை கேட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, ஆகையால், சபையை அமைதிப்படுத்தி தாருங்கள் என கேட்டுக்கொண்டார். எனினும், அந்த கேள்விக்கு பதிலளிப்பதற்கு கால அவகாசம் கோரப்பட்டது.

இதனிடையே, சாணக்கியன் ராசமாணிக்கத்தின் பெயரை ​சொல்லி, கேள்விகளை கேட்குமாறு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அழைத்தார்.

தனது ஆசனத்தில் இருந்து எழும்பிய சாணக்கியன் ராசமாணிக்கம், நான் சுணங்கி தான் சபைக்கு வந்தேன். எனினும், சபைக்கு ஒவ்வாத வார்த்தை பிரயோகிக்கப்பட்டதாக கேள்விப்பட்டேன். அப்படியாயின், அந்த வார்த்தையை வாபஸ் ​பெற்றுக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

எனினும், கேள்வியை கேட்குமாறு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, கேட்டுக்​கொண்டார்.

அப்போது எழுந்திருந்த சாணக்கிய ராசமாணிக்கம், கேட்கவில்லையே, எனக் கூறினார்.

எனினும், அதற்கு பதிலளித்த சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, ஹெட்ஃபோன் போடுங்கள், ஹெட்ஃபோனை போடுங்கள் என்றார்.

எனினும், நீங்கள் கூறுவதும் கேட்கவில்லையே, கேட்கவில்லையே என சாணக்கியன் கூறினார். இதனால் சபையில் சிரிப்பொலி எழுந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X