2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

சம்பந்தன் சமூகமளிக்காமைக்கு இதுதான் காரணம்

George   / 2017 பெப்ரவரி 04 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.பி.மதன்

கொழும்பு, காலிமுகத்திடலில் இன்று இடம்பெற்ற, 69ஆவது வருட சுதந்திரதின நிகழ்வில், எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் கலந்துகொள்ளவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் மட்டுமே கலந்து கொண்டார்.

'திருகோணமலையில் உள்ள ஆலயமொன்றில் இடம்பெறும் கும்பாபிஷேக நிகழ்வில் கலந்துக்கொள்ளச் சென்றுள்ளமையால், எதிர்க்கட்சித் தலைவரால் சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்ள முடியவில்லை' என கூட்டமைப்பின் பேச்சாளரான சுமந்திரன் எம்.பி, தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.

இது தொடர்பில், விழா ஏற்பாட்டு குழுவுக்கு, எதிர்க்கட்சித் தலைவர் அறிவித்திருந்ததாகவும் அவர் கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவர், சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்ளாதமை குறித்து கேட்ட போது, அவர் இதனைக் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X