2025 ஒக்டோபர் 14, செவ்வாய்க்கிழமை

செம்மணியில் கோர விபத்து: இளைஞன் பலி

Freelancer   / 2025 ஒக்டோபர் 14 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம், செம்மணிப் பகுதியில் நேற்று (13)  இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளும் பஸ்ஸும் நேருக்கு நேர் மோதியே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இந்த விபத்தில் ஓட்டோ ஒன்றும் சிக்கி வீதியை விட்டு விலகி வயலுக்குள் பாய்ந்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த யாழ். வடமராட்சி கிழக்கு, உடுத்துறையைப் பகுதியைச் சேர்ந்த செந்தமிழ் விளையாட்டுக் கழக வீரரும் சிறந்த உதைப்பந்தாட்ட நடுவருமான யூட் (வயது 27) என்பவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X