2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

சமஷ்டி தொடர்பில் நாடாளுமன்றத்தில் யோசனை முன்வைக்க சம்பந்தர் முயற்சி

Gavitha   / 2016 மார்ச் 07 , மு.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமஷ்டி தொடர்பில் நாடாளுமன்றத்தில் யோசனை முன்வைக்க சம்பந்தர் முயற்சி வடக்கு, கிழக்குக்கு சமஷ்டி ஆட்சி முறையொன்றைக் கொண்டுவருவதற்கான யோசனைத் திட்டமொன்றை, எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளதாக, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்குக்கு சுயநிர்ணய உரிமை கிடைக்க வேண்டும் என்று போராடும் முயற்சியை இன்னமும் கைவிடவில்லை என்றும், ஊடகமொன்றுக்குக் கருத்து தெரிவிக்கும் போது, சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வடக்கு - கிழக்குக்கு சமஷ்டி ஆட்சி முறை கிடைப்பதற்கு உதவுமாறு, இந்தியாவிடம் கோரிக்கையொன்றை முன்வைக்கவுள்ளதாக அண்மையில், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறானதொரு ஆட்சிமுறை கிடைக்கப்பெறும் வரையில், அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரங்களை மாகாணசபைகளுக்கு முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .