Editorial / 2019 ஜூலை 26 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
“புதிய அரசமைப்பு தொடர்பான கலந்துரையாடல் மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும். அரசாங்கம் சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் கருத்துகளை நான் ஏற்றுக்கொள்கிறேன்” என, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அமைச்சர் மனோ மேலும் கூறுகையில், அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சிகளான ஐ.தே.க, சு. க ஆகிய இரண்டு கட்சிகளுமே இந்தப் பின்னடைவுக்குப் பிரதான காரணமெனக் குற்றஞ்சாட்டினார்.
இந்தப் பின்னடைவுகளையிட்டு தான் ஆச்சரியப்படவில்லை என்றும் தென்னிலங்கை பெரும்பான்மைக் கட்சித் தலைமைகளிடம், அரசியல் தீர்வுக்கான மனோதிடம் இல்லை எனத் தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்திருந்ததாகவும், மனோ கணேசன் தெரிவித்தார்.
இதை அரசமைப்பு வழிகாட்டல் குழுவிலேயே தான் பகிரங்கமாகக் கூறியிருந்ததாகவும் இது நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் தமிழ் மக்களிடம் கூறியிருந்ததாகவும் தெரிவித்த அவர், தான் அன்று சொன்னது இன்று சரியானதையிட்டு மிகவும் கவலையடைவதாகக் குறிப்பிட்டார்.
“இன்றைய நிலையில் த.தே.கூ தலைவர், புதிய அரசமைப்பு தொடர்பில் அனைத்துச் சிறுபான்மை கட்சிகளின் கூட்டமொன்றுகுக்காக அழைப்பு விடுக்க வேண்டும் என்பது தமிழ் முற்போக்கு கூட்டணியின் யோசனையாகும். புதிய அரசமைப்புக்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எந்தவொரு முன்னெடுப்புக்கும் ஒத்துழைப்பு வழங்க தமிழ் முற்போக்கு கூட்டணி தயார்” என்று, அமைச்சர் மனோ மேலும் கூறினார்.
23 minute ago
58 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
58 minute ago
1 hours ago
2 hours ago