Princiya Dixci / 2017 ஏப்ரல் 19 , பி.ப. 08:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலகத்தின் ஆசிய மற்றும் பசுபிக் நாடுகளுக்கான அமைச்சர் ஆலொக் சர்மா, இவ்வாரம் இலங்கைக்கு மேற்கொள்ளவிருந்த விஜயத்தை இரத்துச் செய்தார்.
ஐக்கிய இராச்சியத்தின், நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஜூன் மாதம் நடக்குமென, அந்நாட்டுப் பிரதமர் தெரேசா மே, திடீரென அறிவித்ததால், சர்மாவின் இலங்கைக்கான விஜயம் இரத்துச் செய்யப்பட்டதென, கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்த விஜயத்தின் போது, “பிறிக்ஸிற்றுக்குப் பின்னரான சவால்கள்” எனும் தலைப்பில் லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில், நாளையதினம் (21) சர்மா உரையாற்றவிருந்தார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், ஒக்டோபர் 2015 தீர்மானத்தைச் செயற்படுத்த இலங்கைக்கு கால அவகாசம் வழங்கும்படி ஐக்கிய இராச்சியம் கோரியிருந்தது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் ஆக்கபூர்வமான செயற்பாட்டைத் தான் பாராட்டுவதாக, இறுதி அமர்வின் உயர்பீடக் கூட்டத்தின் போது சர்மா கூறியிருந்தார்.
உறுதித்தன்மை, நல்லிணக்கம், நீதி என்பனவற்றை நிலைநாட்ட ஒக்டோபர் 2015 தீர்மானத்தையும் போரின் பின்னரான நடவடிக்கைகளையும் பூரணமாகச் செயற்படுத்த இலங்கைக்கு நாம் கால அவகாசம் வழங்க வேண்டுமென்றும் சர்மா கூறியிருந்தார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது அமர்வின் நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால், சமரவீரவுடன், சர்மா பேச்சுக்களை நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .