Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Thipaan / 2017 செப்டெம்பர் 22 , மு.ப. 07:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேரின்பராஜா திபான்
முன்னாள் பிரதியமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான சரண குணவர்த்னவை, எதிர்வரும் 26ஆம் திகதி, மன்றில் ஆஜர்படுத்துமாறு, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் அருணி ஆட்டிகல, நேற்று (21) கட்டளையிட்டார்.
வெலிக்கடை விளக்கமறியல் சிறைச்சாலையின் அத்தியட்சகருக்கே, மேற்கண்ட கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
சரண எம்.பி, தேசிய லொத்தர் சபையின் தலைவராக இருந்த காலப்பகுதியில், அந்தச் சபைக்கு வாகனங்களை வாடகைக்கு அமர்த்தி, அரசுக்கு நட்டத்தை ஏற்படுத்தினார் என்ற, குற்றச்சாட்டில், இலஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் 70 ஆவது பிரிவின் கீழ், ஒன்பது வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவால், 2016ஆம் ஆண்டு, தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்குகள், கொழும்பு மேலதிக நீதவான் அருணி ஆட்டிகல முன்னிலையில் நேற்று எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சரண குணவர்தன எம்.பி, மன்றில் ஆஜராகியிருக்கவில்லை.
அவர், வேறொரு வழக்குக்காக, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என, நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்ட நிலையிலே, நீதவான் மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தார்.
2008ஆம் ஆண்டு, அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராகப் பதவி வகித்த போது, அரசுக்குச் சொந்தமான 8 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொகுசு ஜீப்பை முறைக்கேடாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கொழும்பு குற்றப் பிரிவினரால், இம்மாதம் 4ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட அவர், கோட்டை நீதவான் நீதிமன்றத்தால், ஒக்டோபர் 2ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
17 minute ago
17 minute ago
21 minute ago